Tamil FM

Tamil FM

Thirukural

1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்

7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது

8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது

9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

11

வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி

14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்

15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது

17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்

18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்

20

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு

21

நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு

22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு

24

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி

26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்

29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது

30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்

31

அறன்வலியுறுத்தல்

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு

32

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு

33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்

34

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற

35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்

39

அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்

புறத்த புகழும் இல

40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி

41

இல்லறவியல்

இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

42

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை

43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

46

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவன்?

47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை

48

ஆற்றின் ஒழுக் கி அறனிழுக்கா இல்வாழ் க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து

49

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்

தெய்வத்துள் வைக்கப் படும்

Thursday, November 25, 2010

மனித எலும்புகள் பட்டியல்

உடற்கூறியல் - என்புக்கூட்டுத்தொகுதி (Skeletal System)

ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம். மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன.




மனித எலும்புக்கூடு


மண்டையறை எலும்புகள் (8)

* 1 நுதலெலும்பு (frontal bone)
* 2 சுவரெலும்பு (parietal bone) (2)
* 3 கடைநுதலெலும்பு (temporal bone) (2)
* 4 பிடர் எலும்பு (occipital bone)
* ஆப்புரு எலும்பு (sphenoid bone)
* நெய்யரியெலும்பு (ethmoid bone)

முக எலும்புகள் (14)

* 7 கீழ்த்தாடை எலும்பு (mandible)
* 6 மேற்றாடை எலும்பு (maxilla) (2)
* அண்ணவெலும்பு (palatine bone) (2)
* 5 கன்ன எலும்பு (zygomatic bone) (2)
* 9 நாசி எலும்பு (nasal bone) (2)
* கண்ணீர் எலும்பு (lacrimal bone) (2)
* மூக்குச் சுவர் எலும்பு (vomer)
* கீழ் மூக்குத் தடுப்பெலும்பு (inferior nasal conchae) (2)

நடுக்காதுகளில் (6):

* சம்மட்டியுரு (malleus)
* பட்டையுரு (incus)
* ஏந்தியுரு (stapes)

தொண்டையில் (1):

* தொண்டை எலும்பு (நாவடி எலும்பு) (hyoid)

தோள் பட்டையில் (4):

* 25. காறை எலும்பு (clavicle)
* 29. தோள் எலும்பு (scapula)

மார்புக்கூட்டில் thorax(25):

* 10. மார்பெலும்பு (sternum) (1)
* மேலும் மூன்று என்புகளாகக் கருதப்படலாம்: பிடியுரு (manubrium), உடல் மார்பெலும்பு (body of sternum), வாள்வடிவ நீட்டம் (xiphoid process)

* 28. விலா எலும்புகள் (rib) (24)

முதுகெலும்புத் தூண் (vertebral column) (33):

* 8. கழுத்து முள்ளெலும்புகள் (cervical vertebra) (7)
* மார்பு முள்ளெலும்புகள் (thoracic vertebra) (12)
* 14. நாரிமுள்ளெலும்புகள் (lumbar vertebra) (5)
* 16. திரிகம் (திருவெலும்பு) (sacrum)
* வால் எலும்பு (குயிலலகு) (coccyx)

மேற்கைகளில் (arm) (1):

* 11. புய எலும்பு (மேல்கை எலும்பு) (humerus)
o 26. புய எலும்புப் புடைப்பு (மேல்கை எலும்புப் புடைப்பு) (condyles of humerus)

முன்கைகளில் (forearm) (4):

* 12. அரந்தி (ulna) (2)
* 13. ஆரை எலும்பு (radius) (2)
o 27. ஆரை எலும்புத் தலை (head of radius)

கைகளில் (hand) (54):

* மணிக்கட்டுகள் (carpal):
o படகெலும்பு (scaphoid) (2)
o பிறைக்குழி எலும்பு (lunate) (2)
o முப்பட்டை எலும்புtriquetrum) (2)
o பட்டாணி எலும்பு (pisiform) (2)
o சரிவக எலும்பு (trapezium) (2)
o நாற்புறவுரு எலும்பு (trapezoid) (2)
o தலையுரு எலும்பு (capitate) (2)
o கொக்கி எலும்பு (hamate) (2)

* அங்கை முன்னெலும்புகள் (அனுமணிக்கட்டு எலும்புகள்) (metacarpal): (5 × 2)

* விரலெலும்புகள் (phalange):

*
o அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2)
o நடு விரலெலும்புகள் (Intermediate phalanges) (4 × 2)
o தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2)

இடுப்புக்கூடு (pelvis) (2):

* 15. இடுப்பெலும்பு (ilium) மற்றும் கீழ் இடுப்பெலும்பு (ischium)


கால்கள் (leg) (8):

* 18. தொடையெலும்பு (femur) (2)
o 17. இடுப்பு மூட்டு (hip joint) (மூட்டு, எலும்பல்ல)
o 22. பெரிய தொடையெலும்புக் கொண்டை (greater trochanter of femur)
o 23. தொடையெலும்புப் புடைப்பு (condyles of femur)
* 19. சில்லெலும்பு (patella) (2)
* 20. கால் முன்னெலும்பு (கணைக்காலலுள்ளெலும்பு) (tibia) (2)
* 21. சிம்பு எலும்பு (கணைக்கால்வெளியெலும்பு) (fibula) (2)

காலடிகளில் (52):

* கணுக்காலெலும்புகள் (tarsal):
o குதிகால் (calcaneus) (2)
o முட்டி (talus) (2)
o படகுரு எலும்பு (navicular bone) (2)
o உள் ஆப்புவடிவ எலும்பு (2)
o இடை ஆப்புவடிவ எலும்பு (2)
o வெளி ஆப்புவடிவ எலும்பு (2)
o கனசதுர எலும்பு (cuboidal bone) (2)

* அனுகணுக்காலெலும்புகள் (metatarsal) (5 × 2)

* விரலெலும்புகள் (phalange):
o அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2)
o நடு விரலெலும்புகள் (intermediate phalanges) (4 × 2)
o தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2)

Tuesday, November 23, 2010

Abbreviation










GDC
:

Government Data Centre



AEO
:

Assistant Elementary Officer



AEEO
:

Assistant Elementary Educational Officer


A.P
:


Assistant Programmer


A.D
:

Assistant Director



D.G.E
:

Directorate of Government Examination


NIC

:

National Informatics Center


CEO
:

Chief Education Officer



HSE
:

Higher Secondary Examination



DEEO
:

District Elementary Educational Officer


AO
:


Administrative Officer

ஆய்தம்

ஆய்தம்


தமிழ் எழுத்துக்களில் உயிர், மெய் என்ற இரண்டிலும் அடங்காதது ஆய்தம் (குற்றியலுகரமும், குற்றியலிகரமும் உயிர் ஒலிகளே). வடிவத்தாலும் ஏனைய எழுத்துகளைப் போல் கோட்டு வடிவம் இன்றிப் புள்ளி வடிவம் பெற்றிருப்பது ஆய்தம். அதனால்தான் இதனைத் ‘தனிநிலை’ என்றழைப்பர் பின்னால் வந்த இலக்கண நூலார் (நன்னூல்). ஆய்த எழுத்துக் குறித்துப் பல்வேறுபட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆய்த எழுத்தைத் தொல்காப்பியர் ஒரு சார்பெழுத்தாகக் கருதுகிறார் என்பதைச் சென்ற பாடத்தில் பார்த்தோம். ஆய்தம் மொழியில் பயிலும் முறையை விளக்கும் தொல்காப்பியர் அது தனிமொழியிலும் புணர்மொழியிலும் வருவதை விளக்குகிறார்.


தனிமொழி ஆய்தம்


ஒரு குற்றெழுத்தின் முன்னர், உயிரோடு சேர்ந்த வல்லெழுத்து ஆறன் மேலும் ஆய்தம் வரும். அதாவது குறில் எழுத்தை அடுத்தும் வல்லின உயிர்மெய்க்கு முன்பும் ஆய்தம் வரும். இந்த வல்லின உயிர்மெய் பெரும்பாலும் குற்றியலுகரமாகவே அமையும்; சிறுபான்மை வேறு வல்லின உயிர்மெய்யாகவும் வரும்.


(எ-டு)


எஃகு, அஃது,
கஃசு
பஃறி எ, அ, க, ப
கு, து, சு
றி - குறில்கள்
- குற்றியலுகரங்கள்
- வேறு உயிர்மெய்


நூற்பா


குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே.

(தொல். எழுத்து. மொழி. 5)


‘ஆய்தப் புள்ளி’ என்பதனால் அதனை மெய்போலக் கொள்ள வேண்டும் என்கிறார் இளம்பூரணர்.


புணர்மொழி ஆய்தம்


இரு சொற்களின் புணர்ச்சியில் ஆய்தம் வருவதுண்டு.


(எ-டு)


அல் + திணை
பல் + தொடை
கல் + தீது
முள் + தீது

>
>
>
>
அஃறிணை
பஃறொடை
கஃறீது
முஃடீது


இங்கு நிலைமொழியீற்றில் உள்ள லகரமும் ளகரமும் வருமொழி முதலில் உள்ள தகரத்தோடு புணரும் போது ஆய்தமாகத் திரிந்துள்ளன. இவ்வாறு வருவதே புணர்மொழி ஆய்தம்.


நூற்பா


ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும்.

(தொல். எழுத்து, மொழி. 6)


ஈறியல் மருங்கு = நிலைமொழியீறும் வருமொழி முதலும் புணர்தல்.

இசைமை = ஆய்த எழுத்தின் ஓசை.


இவ்வாறு புணர்ச்சியில் ஆய்தம் தோன்றுவது பற்றிப் பின்னர்ப் புள்ளி மயங்கியலில் விளக்கப் பெறும். (அலகு 5.1)


தனிமொழி ஆய்தம் தொடர்பான மற்றொரு கருத்து


ஆய்த எழுத்தைப் பற்றித் தொல்காப்பியர் மற்றொரு கருத்தையும் கூறுகிறார். நிறத்தையும், ஓசையையும் குறிக்கும் குறிப்பு மொழிகளில் ஆய்தம் இடம் பெறும். இது அருகிய வழக்கே என்கிறார்.


(எ-டு)


கஃறு (நிறம்), சுஃறு (இசை)


நச்சினார்க்கினியர் ஆய்தம் அளபெடுத்து வருவதை இங்குக் குறிப்பிடுகிறார்.


(எ-டு)


கஃறென்னும் கல்லதர் அத்தம்
சுஃறென்னும் தண்தோட்டுப் பெண்ணை


நூற்பா


உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான.

(தொல். எழுத்து. மொழி. 7)


ஆய்தம் தொடர்பான மொழியியல் கருத்துகள்


ஆய்தத்தை உரசொலி என்பர் மொழியியலார். புணர்மொழியில் வரும் ஆய்தங்கள் வெடிப்பொலிகளின் (வல்லினமெய்) மாற்று வடிவங்கள் என்கிறார் தெ.பொ.மீ. (தமிழ்மொழி வரலாறு, ப. 94,95) கல் + தீது = கற்றீது; முள் + தீது = முட்டீது என வரும் புணர்ச்சிகளில் ற், ட் எனும் வல்லினங்களுக்கு மாற்று வடிவமாக வருவது ஆய்தம். அதாவது ‘கற்றீது’ என்பது ‘கஃறீது’ எனவும் ‘முட்டீது’ என்பது முஃடீது எனவும் வரும்போது ற், ட் ஒலிகளுக்கு ஃ மாற்று வடிவமாக வருவது காணலாம். இதுபற்றிப் பின்னர் அலகு 5.1 இல் பாடத்தில் விரிவாகக் காணலாம். இந்த ஆய்த ஒலி வல்லெழுத்து ஆறன் மேல்நின்று அவற்றின் வல்லோசையை மென்மையாக்கி விடுகிறது. ‘அக்கு’ என்பதில் உள்ள ‘கு’வையும் அஃகு என்பதில் உள்ள ‘கு’ வையும் உச்சரித்து ஒப்பிடுங்கள். இதனை உணர்ந்த மாணிக்கநாயகர் பிறமொழிக்கண் காணப்படும் சில ஒலிகளை மென்மைப்படுத்த ஆய்தத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறிக் ‘காப்பி’யை காஃபி என்று எழுத வழிகாட்டினார்.


ஆய்தம் தொடர்பான இலக்கணக் கருத்துகளைத் தொகுத்துப் பாருங்கள்.


ஆய்தம் உயிரும் மெய்யும் அல்லாத தனிநிலை எழுத்து.


எனினும் மெய்க்குரிய அரை மாத்திரை பெறுவதால் ஒருவகையில் மெய்போலக் கொள்ளப்படும்.


ஆய்தம் தனிமொழியிலும் வரும்; புணர்மொழியிலும் வரும்.


குற்றெழுத்தின் பின்னாலும் வல்லின உயிர்மெய்க்கு முன்னரும் வரும். இதுவே ஆய்தத்துக்கு இடம்.


ஆய்தம் அளபெடுத்தும் வருவதுண்டு.


மொழியியலார் ஆய்தத்தை வெடிப்பொலிகளின் மாற்று வடிவங்களாகக் கொள்கின்றனர்.


ஆய்த எழுத்தைப் பிறமொழிச் சொற்களில் உள்ள வல்லெழுத்துகளை மென்மையாக்கப் பயன்படுத்தும் முயற்சி தமிழில் சிலரால் புகுத்தப்பட்டது