Tamil FM

Tamil FM

Thirukural

1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்

7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது

8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது

9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

11

வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி

14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்

15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது

17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்

18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்

20

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு

21

நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு

22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு

24

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி

26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்

29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது

30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்

31

அறன்வலியுறுத்தல்

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு

32

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு

33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்

34

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற

35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்

39

அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்

புறத்த புகழும் இல

40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி

41

இல்லறவியல்

இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

42

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை

43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

46

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவன்?

47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை

48

ஆற்றின் ஒழுக் கி அறனிழுக்கா இல்வாழ் க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து

49

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்

தெய்வத்துள் வைக்கப் படும்

Friday, August 13, 2010

கண்ணதாசன் பாடல்கள்

கண்ணதாசன்

1. அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்
படம் - ஆயிரத்தில் ஒருவன்
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் டி..எம். சௌந்தரராஜன் குழுவினர்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

குழு -
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

குழு - சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

குழு
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

குழு - பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறுபாதை போகவில்லையே

குழு
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

குழு -
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

---------
2. அச்சம் என்பது மடமையடா
படம் - மன்னாதி மன்னன்
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் டி..எம். சௌந்தரராஜன்


அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உரிமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
ஆ...ஆ...ஆ.... ஆ...ஆ.........
கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பான் தமிழன்னை
ஆ...ஆ...ஆ....ஆ...ஆ.....
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களiன் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
---------
3. அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
படம் -பட்டிக்காடா பட்டணமா
இசை - எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர் - டி.எம். சௌந்தரராஜன்

அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி

கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்கு தாளமடி
சொல்லாத எண்ணங்கள் பலகோடி
என் துன்பத்தின் தீபமடி
பெண்ணாக நான் நினைத்த மண் வீடு கரைந்து
தண்ணீரில் போனதடி
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
காற்றாக பறந்ததடி

எல்லோர்க்கும் ஊர்கோலம் இரண்டு தரம்
அதில் ஒரு கட்டம் முடிந்ததடி
தாயார்க்குப் பின்னாலே சம்சாரம் - அது
தடம் கொஞ்சம் பிரண்டதடி
பண்பாடு காப்பதற்கு பெண் பார்த்து முடித்தேன்
என் பாடு மயங்குதடி
என் வீடும் என் வாழ்வும் ஒரு கோயில்
அடி ராக்கம்மா என் தெய்வம் சிரிக்குதடி

அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி
----
4. அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
படம் - ஆண்டவன் கட்டளை
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா

டி.எம்.எஸ்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

டி.எம்.எஸ்
தென்fனம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

பி.எஸ்.
ஓ ஓ ஓ
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

பி.எஸ்
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

டி.எம்.எஸ்
அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

இருவரும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
------------
5. அம்மா என்பது தமிழ் வார்த்தை
படம் - டீச்சரம்மா
இசை - எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர் - பி. சுசீலா

அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

கவலையில் வருவதும் அம்மா அம்மா
கருணையில் வருவதும் அம்மா அம்மா
தவறு செய்தாலும் மன்னிப்புக்காக
தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் தமிழ் வார்த்தை

பூ<மியின் பெயரும் அம்மா அம்மா
புண்ணிய நதியும் அம்மா அம்மா
தாரணி அழைப்பதும் அம்மா அம்மா
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
-------------
6. அண்ணன் காட்டிய வழியம்மா
படம் - படித்தால் மட்டும் போதுமா
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - டி.எம்.சௌந்தரராஜன்

அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடமால் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது உறவாகும்
தெரியாமல் கெடுப்பது பகையாகும்

அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகள் முறித்து விட்டான்
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

அவனை நினைத்தே நானிருந்தேன்
அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தேன்
இன்னும் அவனை மறக்கவில்லை
அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா
-----------


7. அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
படம் - பச்சை விளக்கு
இசை -விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - பி. சுசீலா

அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தா பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை
நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை

ஒரு பட்டு பிரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்
ஒரு பட்டு பிரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்
அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண்மையில் எழுந்து நின்றாள்
அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண்மையில் எழுந்து நின்றாள்
பாரடி பாரடி பாவையின் ஆசையை ஓரடி ஈரடி நடக்கின்றாள்
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை

அந்தத் தங்க பதுமை உடல் பொங்கும் இளமை
அந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்
அந்தத் தங்க பதுமை உடல் பொங்கும் இளமை
அந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்
அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான்
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தாள்
அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான்
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தாள்
காதலன் காதலி நாடகம் ஆடிடும் நாளெனான்று போனது இளமையிலே
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
ஓ ....
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
----------
8. அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
படம் - பார் மகளே பார்
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி.பி. ஸ்ரீநிவாஸ்

டி.எம. எஸ்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி. எஸ்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி. எஸ்
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

டி.எம்.எஸ்
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி.எஸ்
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

டி.எம்.எஸ்
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

இருவரும்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே
-------
9. அவளுக்கும் தமிழென்று பேர்
படம் - பஞ்சவர்ணக் கிளi
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - டி.எம.f சௌந்தரராஜன்

அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவளுக்கு நிலவென்று பேர்
வண்ண மலர் கொஞ்சும் குழலங்கம் முகிலுக்கு நேர்
அவளுக்கு குயிலென்று பேர்
அவள் குயில் கொண்ட குரல் கொண்டு கொண்டாடும் ஊர்
அவளுக்கு அன்பென்று பேர்
அவளுக்கு அன்பென்று பேர்
அந்த அன்பென்ற பொருள் நல்ல பெண்மைக்கு வேர்
பெண்மைக்கு வேர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவள் எந்தன் அறிவுக்கு நூல்
அவள் மொழிகின்ற வார்த்தைகள் கவிதைக்கு மேல்
கவிதைக்கு மேல்
அவளுக்கு அழகென்று பேர்
அந்த அழகெந்தன் உள்ளத்தை உழுகின்ற ஏர்
உழுகின்ற ஏர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவளுக்கு உயிர் என்று பேர்
என்றும் அவள் எந்தன் வாழ்வெனும் வயலுக்கு நீர்
வயலுக்குநீர்
அவள் எந்தன் நினைவுக்குத் தேன்
இந்த மனம் என்னும் கடலுக்கு கரை கண்ட வான்
அவள் எந்தன் நினைவுக்குத் தேன்
இந்த மனம் என்னும் கடலுக்கு கரை கண்ட வான்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்
------------------
10.அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
படம் - பஞ்சவர்ணக்கிளi
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - பி. சுசீலா

சத்தியம் சிவம் சுந்தரம் ஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணன் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ..
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
பெண்மையை வாழ வைத்தான் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
--------
11. ஆடி அடங்கும் வாழ்க்கையடா
படம் - நீர்க்குமிழி
இசை - வி. குமார்
பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
---------------
12. ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
படம் - பொன்னூஞ்சல்
இசை - எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா

டி.எம்.எஸ்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

பி.எஸ்.
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

ஓ ஓ....
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
மீனாவின் குங்குமத்தை
மீனாவின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

டி.எம்.எஸ்
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

பி.எஸ்
கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ காணும் சின்னங்கள்

டி.எம்.எஸ்
பொன்மாலை அந்தியிலே என் மானை தேடி வரும்
அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும்

இருவரும்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆ...ஆ
ஆ....ஆ
-----
13. ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
படம் - பாலும் பழமும்
இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பாடியவர் - பி. சுசீலா

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
---------
14. ஆறு மனமே ஆறு - அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
படம் -ஆண்டவன் கட்டளை
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - டி.எம். சௌந்தரராஜன்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு....
---
15. ஆயிரம் பெண்மை மலரட்டுமே
படம் - வாழ்க்கைப்படகு
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் - பி. சுசீலா குழுவினர்

ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.....

குழு
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.....

ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி
காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமணம் அங்கே ஒரு மனம் என்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்....

குழு
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.....

மன்னவனே ஆனாலும் ... மண்ணளந்து கொடுத்தாலும்...
பெண் மனதை நீ அடைய முடியாது
வாள் முனையில் கேட்டாலும் வெஞ்சிறையில் போட்டாலும்
உடலன்றி உள்ளமுனைச் சேராது..ஆ...ஆ...ஆ
மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே
------
16. இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
படம் - போலிஸ்காரன் மகள்
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் - பி பி ஸ்ரீனிவாஸ், எஸ் ஜானகி

எஸ். ஜா
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ ..ஓ...ஓ..ஓ
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

வண்ண மலர்களiல் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவாள்
இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ..ஓ..ஓ...
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள்
அவள்விடிந்த பின் துயில்கின்றாள் என் வேதனை கூறாயோ ...ஓ...ஓ..

ஸ்ரீனிவாஸ்
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா..ஆ...ஆ
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

தன் கண்ணனைத் தேடுகிறாள் மனக் காதலைக் கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என்று அதனையும் கூறாயோ...ஓ...ஓ..
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா..ஆ...ஆ
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
--------
17. இறைவன் வருவான் - அவன் என்றும் நல்வழி தருவான்
படம் - சாந்தி நிலையம்
பாடியவர் - பி சுசீலா குழுவினர்

பி எஸ்.
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

ஒன்றுகூடி
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

பி எஸ்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை

ஒன்றுகூடி
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

பி எஸ்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
சின்ன சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
அன்பே என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு

ஒன்றுகூடி
பாசம் என்பது வீடு
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

பி எஸ்
உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்கள் அவனைக் காண்க
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க

ஒன்றுகூடி
கைகள் அவனை வணங்க
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
---------
18. இரவும் நிலவும் வளரட்டுமே
படம் -கர்ணன்
இசை -விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் - பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

பி எஸ்
ஆ ஆ ஆ...
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
இரவும் நிலவும் வளரட்டுமே

டி எம். எஸ்
தரவும் பெறவும் உதவட்டுமே
நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே

இருவரும்
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே

பி எஸ்
இரவும் நிலவும் வளரட்டுமே

மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே

டி.எம்.எஸ்
அங்கு மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
பி எஸ்
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
டி எம் எஸ்
நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே
இருவரும்
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
பி எஸ்
இரவும் நிலவும் வளரட்டுமே

பி எஸ்
ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே
டி எம் எஸ்
அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
பி எஸ்
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே
டி எம் எஸ்
அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே
இருவரும்
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
இரவும் நிலவும்
பி எஸ்
வளரட்டுமே
---------------
19. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
படம் - திருவருட் செல்வர்
இசை - கே வி மஹாதேவன்
பாடியது = சீர்காழி கோவிந்த ராஜன்

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
அவன் கடவுளiன் பாதியடி ஞானத் தங்கமே .... ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

பிள்ளையைக் கிள்ளi விட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு...
பிள்ளையைக் கிள்ளi விட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளi நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே
அவன்தான் தரணியைப் படைத்தானடி ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே
-------------
20. இயற்கை என்னும் இளைய கன்னி
படம் - சாந்தி நிலையம்
இசை - எம் எஸ் விஸ்வநாதன்
பாடியவர்கள் - எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசீலா

பி எஸ்
ஆஹுஹா......
எஸ் பி
ஓஓஹோ......
இருவரும்
ஆ ஆ ஆ.......

எஸ் பி
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

பி எஸ்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

எஸ் பி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பி எஸ்
பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
எஸ் பி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
பி எஸ்
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கே தூது விட்டாள்
இருவரும்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

எஸ் பி
தலையை விரித்து தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ
பி எஸ்
இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடைகள் மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்fடிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ
இருவரும்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

எஸ் பி
மலையை தழுவிச் செல்லும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம்தானே
மஞ்சள் ஒன்று போடலாமே
பி எஸ்
தரையை தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப் பட்டுப் பேசலாமே
இருவரும்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
ஆஹுஹா....ஹுஹா.........
------
21. உலகம் பிறந்தது எனக்காக
படம் - பாசம்
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் -டி எம் சௌந்தரராஜன்

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக - அன்னை
மடியை விரித்தாள் எனக்காக
காற்றும் மிதக்கும் ஒலிகளiலே
கடலில் தவழும் அலைகளiலே
இறைவன் இருப்பதை நானறிவேன்
என்னை..அவனே தானறிவான்

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக - அன்னை
மடியை விரித்தாள் எனக்காக

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக - அன்னை
மடியை விரித்தாள் எனக்காக
-----------
22. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
படம் - கர்ணன்
இசை -விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

நல்வழி

ஒளவையார்

கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து து¡மணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

#1.
புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.

#2.
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட் டாங்கில் உள்ள படி .

#3.
இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழல் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

#4.
எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லால்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.

#5.
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்திவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்து¡ரம் தாம்நி¨ந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

#6.
உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்க்கம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேரி னால்என்
உடலோடு வாழும் உயிர்க்கு.

#7.
எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல் நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.

#8.
ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - கேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.

#9.
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று(
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.

#10.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென்(று) இட்டுண் டிரும் .

#11.
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது.

#12.
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.

#13.
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்பவர் - ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்.

#14.
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கள்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச் சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்.

#15.
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத அல்லாம்
மிதியே மதியாய் விடும்.

#16.
தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.

#17.
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும்பாவம் என்னஅறிந்(து) அன்றிடார்க்(கு) இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்.

#18.
பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டா - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம் .

#19.
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.

20.
அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.0

21.
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்.

22.
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரோ அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம் .

23.
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை .

24.
நீறில்லா நெற் றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை .

#25.
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

#26.
மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனில்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

#27.
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல் .

#28.
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந் தெண்ணுவன = கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.

#29.
மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - கரந்தமுதம்
கற்றா தால்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர் .

#30.
தாம்தாம்முன் செய்தவினை தாமே அநுபவிப்பார்
பு ந்தா மரைபோல் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமே விதி.

#31.
இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ் சாத்
தாரத்தின் நன்று தனி .

#32.
ஆறிடும் வேவும் மடுகும்போல் ஆம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.

#33.
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்திப்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தில்
வேருக்கு நெக்கு விடும்.

#34.
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாரும் வேண்டாள் மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.

#35.
பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - து¡வா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு.

#36.
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்டொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.

#37.
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நு¡லகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி.

#38.
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.

#39.
முப்பதால் ஆண்டளவில் மூன்றற் றொருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு .

#40.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவு ம்
முவர் தமிழும் முனிமொழியு ம் - கோவை
திருவா சகமும் தி முலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.

முதுரை

ஒளவையார்

வாக்குண்டாம்
கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரான்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

#1.
நன் றி ஒருவற்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

#2.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் ஒழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் ஒழுத்துக்கு நேர்.

#3.
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனிமையவும் -இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு .

#4.
அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

#5.
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

#6.
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்று¡ண்
பிளந்திறுவ நல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான் .

#7.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்று
நு¡லளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்.

#8.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று .

#9.
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

#10.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிக்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

#11.
பண்டு முளைப்ப தரிசியே ஆனாலும்
விண்டும் போனாள் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகா தளவின்றி
ஏற்ற கருமம் செயல்.

#12.
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்று¡றல்
உண்ணீரும் ஆகி விடும்.

#13.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - ஈவைநடுவே
நீட்டோவை வாரியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்,

#14.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

#15.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.

#16.
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலைவில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

#17.
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு .

#18.
சீர்¢யர் கெட்டாலும் சீரியரே சீரயேர்மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும் - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்.

#19.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.

#20.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்தே போல்வாரும் உண்டு.

#21.
இல்லாள் அகத்திருக்க இல்லாத(து) ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த து¡றாய் விடும் .

#22.
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈதேதல்
முற்பவத்திற் செய்த வினை.

#23.
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம் .

#24.
நற்றா மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்ந்தார்ப்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
முர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

#25.
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துரையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

#26.
மன்னனும் மாசற்க் கற்றோனும் சீர்து¡க்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்¡ல கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

#27.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்தொழுகாப் பெண்.

#28.
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா(து) ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.

#29.
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும் அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு போம் .

#30.
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

உலக நீதி

உலக நீதி
#1

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே

#2

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#3

மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#4

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


#5

வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#6

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே

#7

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே

#8

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#9

மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்
மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#10

மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே

#11

அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதெது செய்வானோ ஏமன்றானே

#12

கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

#13

ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே

2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல்

மாஸ்கோ: "வரும் 2050ம் ஆண்டில் ஆர்க்டிக் துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் இருக்காது' என, ரஷ்ய வானிலை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். ரஷ்ய வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் ப்ரொலொவ், இது குறித்து கூறியதாவது: வட துருவமான ஆர்க்டிக் பகுதியில் ஒரு கோடியே 10 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பனிக்கட்டி இருந்தது.



தற்போது ஒரு கோடியே 80 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பனிக்கட்டியின் அளவு குறைந்துள்ளது. வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து, விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் அளவு கூடியதால், வெப்பம் அதிகரித்து பனிப் பாறைகள் உருகி விட்டன. இதே நிலை நீடித்தால், இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகளில் கோடை காலத்தில் இப்பகுதியில் பனிப்பாறைகளே இல்லாத நிலை ஏற்படும்.



ஆர்க்டிக் துருவப் பகுதியை கண்காணிப்பதற்காகவே 10 ஆயிரம் கோடி ரூபாயில் விண்வெளித் திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளோம். இதன் ஒரு கட்டமாக ஆர்க்டிக் பகுதியில் சேரும் ஹைட்ரோ கார்பன் அளவை கணக்கிடுவது உள்பட பல்வேறு விஷயங்களை ஆராய செயற்கைக் கோள்களை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரஷ்யா, அமெரிக்கா, கனடா, நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளுடன் விவாதித்து வருகிறோம். இவ்வாறு அலெக்சாண்டர் ப்ரொலொவ் கூறினார்.

விமானத்தை விட வேகமாகச் செல்லும் கார்

2012ம் ஆண்டில் விமானத்தை விட வேகமாகச் செல்லக் கூடிய கார் பரீட்சார்த்தம் பார்க்கப்படும் என அறிய வருகிறது. ரிச்சர்டு நோபல் எனும் இங்கிலாந்துக்காரர் தலைமையில், ஒரு குழு இதன் முன் முயற்சியாக மணிக்கு 1228 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரை உருவாக்கி பரீட்சார்த்தம் பாரத்திருந்தனர்.

ஜெட் விமான என்ஜினைக் கொண்டு, �பால்கான்� ராக்கெட் தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்தக் கார் விமானத்தை விட வேகமாக மணிக்கு 1600 கிலோ மீட்டருக்குமான வேகத்தில் செல்லும். சுருக்கமாகச் சொல்லின் பார்முலா-1 கார் பந்தயத்துக்கு பயன்படுத்திய காரை விட 180 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கும்.

ஆய்வுபணிகள் முடிந்து வடிமைக்கும் பணி தொடங்கியிருக்கும் இந்தக் கார் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைறிய பின், 2012-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சோதனை ஓட்டம் நடைபெறுமெனவும் தெரியவருகிறது.

பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் ரகசியம்

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும் சீதோஷ்ண நிலை காரணமாகவும், ஒவ்வொரு ஆண்டும் இடம் பெயர்கின்றன. இந்த இடப் பெயர்ச்சியின் போது அவை பல ஆயிரம் கி.மீ. தூரத்தை கடக்கின்றன. சில பறவைகள் தொடர்ந்து பல மணி நேரம் பறந்து இலக்கை அடைகின்றன.

“பல ஆயிரம் கி.மீ., தூரம் தொடர்ந்து பறப்பதற்கான உடல் திறன், இப்பறவைகளுக்கு எப்படி கிடைக்கிறது…’ என்பது, பறவைகள் குறித்த ஆய்வாளர்களின் நீண்ட நாள் கேள்வியாக இருந்தது.

இந்நிலையில், நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் பறவைகள் சக்தி பெற, “பெர்ரி’ பழங்களை அதிகமாக உண்ணுகின்றன என்ற புதிய தகவல் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அமெரிக்க ரசாயன கழகம் நடத்திய தேசிய கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

“மனிதர்களின் உடல் நலத்திற்கு சத்துக்கள் தரும் பழங்கள், காய்கறிகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளோம். இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகளும், அதிக சத்துக்கள் நிறைந்த உணவையே விரும்புகின்றன…’ என்று ரோட்தீவு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு தலைவர் நவீன்டிராசீரம் கூறியுள்ளார்.

பெர்ரி பழங்களை உண்ணும் 12 பறவைகளை ரோட் தீவு, டின்னி பிளாக் தீவுகளில் நவீன்டிராசீரம் மற்றும் அவருடன் பணியாற்றுபவர்கள் சேகரித்தனர். இப்பறவைகள் அட்லாண்டிக் கடல் வழியாக பறக்கும் போது இடையே உள்ள தீவுகளில் இறங்கின. அப்போது பறவைகளின் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு மற்றும் நன்கு பழுத்த நிலையில் உள்ள ஆரோவுட், வின்டர் பெர்ரி, பேபெர்ரி, சோக் பெர்ரி, எல்டர்பெர்ரி ஆகிய பழங்களின் பிக் மென்ட்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் திறன் குறித்து நவீன்டிராசீரம் கூறிய தாவது:

மற்ற பெர்ரி பழங்களின் சராசரியை விட ஆரோவுட் பழத்தில் 650 சதவீதத்திற்கும் அதிகமான பிக்மென்ட்டும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் 150 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உள்ளன. இதனால் தான் பறவைகள் ஆரோவுட் பழங்களை அதிகமாக உண்கின்றன. இலையுதிர் காலத்தில் இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள், தங்கள் எடையைப் போல மூன்று மடங்கு பெர்ரி பழங்களை உண்ணுகின்றன. ஒரு மனிதன் தினசரி 136 கிலோ சாப்பிட்டால் எந்த அளவு சக்தி கிடைக்குமோ அதைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள் கறுப்பு நிறத்திலும், ஆழ்ந்த பிக்மென்ட் மற்றும் உயர்வான ஆன்டி ஆக்சிடன்ட் கொண்ட பழங்களை விரும்புவதை, முன்னதாக விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர். ஆன்டி ஆக்சிடன்ட், நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன், பறவைகள் நீண்ட தூரம் பறப்பதற்கான சக்தியையும், உடல் வெப்பம் அதிகரிக்கும் சக்தியையும் தருகின்றன. இவ்வாறு நவீன்டிராசீரம் கூறியுள்ளார்.

பழங்களை தின்று கொட்டைகளை எச்சங்களாக வெளியேற்றுவதன் மூலம் பழம் தரும் தாவரங்கள் பல இடங்களில் பரவுகின்றன. இதன் மூலம் சக்தியளிக்கும் பழங்களை தரும் பெர்ரி இன மர வகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உலகின் பல இடங்களில் அவை பரவ, இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் உதவுகின்றன.